நீங்கள் தகுதியானவரா?

மேம்பட்ட ஆங்கிலம்

சிறந்த வாழ்க்கை


புதிதாக வந்திறங்கியவர்களுக்கு இலவச ஆங்கிலப் பாடங்கள்


வயதுவந்த புலம்பெயர்ந்தோர் ஆங்கில நிகழ்ச்சித் திட்டம் பற்றி  

 • 510 மணி நேரம் வரையிலான இலவச ஆங்கிலப் பாடங்களையும், இலவச குழந்தைப் பராமரிப்பையும் பெறுதல் (தகுதியுடையவராய்  இருந்தால்).
 • ஆஸ்திரேலியாவில் வாழ, பணிபுரிய மற்றும் கல்வி கற்கத் தேவையான நடைமுறை ஆங்கிலத்தைப் படித்தல்.
 • அரசு மற்றும் சமூக சேவைகளை அணுகுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளல்.
 • அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
 • வேலை அல்லது படிப்புக்காகத் தயாராகுதல் மற்றும் உங்கள் எதிர்காலத்துக்கெனத் திட்டமிடுதல்.

 

தகுதி வரம்பு

 • உங்களுக்குத் தகுதியுடையோர் புலம்பெயர்வு விசா வழங்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் விசா கடிதம் கிடைத்த ஆறு மாதங்களுக்குள்ளாகப் பதிவு செய்து கொள்ளவும்.
 • உங்களிடம் குடும்ப விசா, திறமைக்கான விசா, மனிதாபிமான அடிப்படையிலான விசா, வாழ்க்கைத்துணை விசா அல்லது அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசா* உள்ளது.
 • உங்களுக்கு ஆங்கிலம் பேசவோ/படிக்கவோ/எழுதவோ தெரியாது அல்லது உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டும்.  
 • உங்கள் வயது 18 –க்கு மேல் உள்ளது. 15 முதல் 17 வயதுடைய சில புலம்பெயர்ந்த இளையோரும் தகுதியுடையவராக இருக்கலாம்.

*அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசாக்களில் வேலை மற்றும் விடுமுறை விசா, பணிபுரியும் விடுமுறை விசா அல்லது விருந்தினர் விசா போன்றவை அடங்காது என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.

 

அனுசரணையான கல்வித் தெரிவுகள்  

 • குயின்ஸ்லாந்து முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் முழு நேர அல்லது பகுதி நேரப் படிப்பு.
 •  முழு நேரப் படிப்பில் நீங்கள் கலந்து கொள்ள முடியவில்லையென்றால், வீட்டில் தனியாகப் பயிற்றுவிக்கும் தன்னார்வ ஆசிரியரின் ஆதரவு.
 • தொலைதூரக் கல்வி மூலம் இணையத்தில் படிப்பு.
 • ஆஸ்திரேலியாவில் வந்திறங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் உங்கள் AMEP-ஐ நிறைவு செய்தல்.

 

வகுப்பில்  நான் எவற்றைக் கற்றுக் கொள்வேன்?

 • ஆங்கில அறிவில் உங்கள் தகுதி நிலைக்கு உகந்த வகுப்பில் சேருதல்.
 • நீங்கள் படிக்கும்போது, எங்கள் சமூகத் தொடர்பு அலுவலர் மற்றும் உங்கள் AMEP வழக்கு மேலாளர் போன்றோரின் ஆதரவு.
 • ஆஸ்திரேலிய வேலைத்தலத்தின் மொழி, பண்பாடு மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
 • உங்களுக்குக் குறைந்த அளவு கல்வியறிவு இருந்தாலோ அல்லது கற்கும் திறனைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் இருந்தாலோ கூடுதல் ஆங்கிலப் பயிற்றாசிரியர் பெறுதல்.
 • நீங்கள் ஆங்கிலம் கற்கும்போது இலவச குழந்தைப் பராமரிப்பு பெறுதல் (தகுதியிருக்கும் பட்சத்தில்)
 • நேர்காணல்களுக்குத் தயார் செய்துகொள்ளல் மற்றும் சுயவிவரத் தொகுப்பு (resume) எழுதுதல்
 • 80 மணிநேரம் வரை வேலை அனுபவம் பெறுதல்

 

துண்டுப் பிரசுரத்தைப்
பதிவிறக்கம் செய்யவும்

நான் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்?

 

Step 1

இப்போது விசாரிக்கவும்

அல்லது

தொலைபேசி:
(07) 3244 5488

அல்லது


உங்களுக்கு அருகிலுள்ள TAFE குயின்ஸ்லாந்து உள்ள இடத்துக்குச் செல்லவும்.
தயவுசெய்து உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா பற்றிய தகவல்களைத் தயாராக வைத்திருக்கவும்.

இங்கே சொடுக்கவும்
Step 2

AMEP வழக்கு மேலாளர் ஒருவருடன் சேர்ந்து ஆங்கில மொழி மதிப்பீட்டை நிறைவு செய்யவும்.
Step 3

உங்கள் AMEP வழக்கு மேலாளர் உங்களுக்கு ஒரு வகுப்பை ஒதுக்குவார்.

எங்களது ஆங்கிலப்பாடங்களைப் பற்றி இப்போது விசாரிக்கவும்